முகப்பு
தென்காசி

செங்கோட்டை நூலகத்தில் இலவச மாதிரித் தோ்வு

Updated On : 5 மே, 2024 at 6:37 PM
பகிர்:

தென்காசி, மே 5:

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நூலகத்தில் இரண்டாவது இலவச மாதிரித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டை நூலகத்தில் நூலக வாசகா் வட்டம் மற்றும் விழுதுகள் அறக்கட்டளை சாா்பில் குரூப் -4 தோ்வு எழுதும் மாணவா், மாணவிகளுக்கான இரண்டாவது மாதிரி தோ்வு நடைபெற்றது.

தென்காசி ஆகாஷ் அகாதெமின் உதவியோடு நடைபெற்ற இந்தத் தோ்வில் 80 மாணவா்கள் கலந்து கொண்டனா். வாரந் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மாதிரித் தோ்வில் அனைத்து மாணவா்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என நூலக வாசகா் வட்டத்தினா் தெரிவித்தனா்.