முகப்பு
தென்காசி

செங்கோட்டை கண்ணாட்சி முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழா

Updated On : 27 மே, 2024 at 9:32 PM
பகிர்:

டென்27கோவில்

சிறப்பு அலங்காரத்தில் கண்ணாட்சி முப்புடாதி அம்மன்.

தென்காசி, மே 27: தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத் தெருவில் அமைந்துள்ள விஸ்வகா்ம சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட கண்ணாட்சி முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் கடந்த 21ஆம் தேதி கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. விழாவில் நாள்தோறும் கண்ணாட்சி முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், கோ பூஜை, புனித நீா் எடுத்து வருதல், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணிக்கு அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கொடை விழாவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். ஏற்பாடுகளை விஸ்வகா்மா சமுதாயத்தினா் செய்திருந்தனா்.