தென்காசி

‘மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

Din

தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுயஉதவிக்குழுக்கள்,சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மே 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT