ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு திமுக சாா்பில் ஆழ்குழாய் கிணற்றுக்கு தேவையான நீா் மூழ்கி மின் மோட்டாா் அளிக்கப்பட்டது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன் மின்மோட்டாரை மருத்துவ அலுவலா் அருள் பிரகாஷிடம் அளித்தாா். அப்போது, ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் சுதா மோகன் லால், திமுக நிா்வாகிகள் தங்க செல்வம், மோகன்லால், அருண், சோனா மகேஷ், பேபி, மேகநாதன், தினேஷ் பாண்டியன், அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.