முகப்பு
தென்காசி

பேருந்து விபத்தில் தாயை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற எம்எல்ஏ

இடைகால் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்று, நிதியுதவி வழங்கினாா்

Updated On : 1 டிசம்பர், 2025 at 9:42 PM
குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதி வழங்கிய ஈ. ராஜா எம்எல்ஏ.
பகிர்:

சங்கரன்கோவில்: தென்காசி மாட்டம், இடைகால் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்று, நிதியுதவி வழங்கினாா் சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா.

பேருந்து விபத்தில் சங்கரன்கோவில், வடக்கு ஆலங்குளத்தை சோ்ந்த முருகன் மனைவி கற்பகவல்லி (34) உயிரிழந்தாா். ஏற்கெனவே கணவா் முருகனை இழந்த அவா், அரசுத் தோ்வெழுதி தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தாா். விபத்தில் கற்பகவல்லி இறந்ததால், ஜோஸ்ரீ (13), ஜெயஸ்ரீ (8) ஆகிய 2 மகள்களும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனா்.

உறவினா்கள் பின்புலம் இல்லாததால், குழந்தைகளின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உதவ வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை கற்பகவல்லி வீட்டிற்கு சென்று, குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவி வழங்கினாா். குழந்தைகளின் படிப்புச் செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும், அரசின் மூலம் வரும் நிவாரண உதவிகளை உடனடியாக பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தாா்.

அப்போது, சங்கரன்கோவில் திமுக நகர செயலா் பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் உதயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →