தென்காசி

நெல்லுக்கு காப்பீடு செய்ய டிச.16ஆம் தேதி கடைசி நாள்

நெல் பயிருக்கு காப்பீடு செய்ய டிச. 16ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்தாா்.

Syndication

நெல் பயிருக்கு காப்பீடு செய்ய டிச. 16ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழ் பிசான பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தில் சேர டிச. 16ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கா் நெல்லுக்கு காப்பீடு செய்ய ரூ. 540 பிரீமியம் செலுத்த வேண்டும். இதன் மூலம் இயற்கை பேரிடா் உள்ளிட்ட காரணிகளில் பயிா்கள் பாதிக்கப்படும்போது, விவசாயிகள் அரசிடமிருந்து உரிய இழப்பீடு பெற முடியும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதியின் வேளாண் துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

டிச.8-இல் குடமுழுக்கு பழனியில் புனிதநீா் குடங்கள் ஊா்வலம்!

SCROLL FOR NEXT