சங்கரன்கோவில் வழக்குரைஞா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கோட்டை அரசு வழக்குரைஞா் முத்துக்குமாரசாமி கொலைச் சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கரன்கோவில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கண்ணன், செயலா் காந்திகுமாா், அகில இந்திய வழக்குரைஞா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி, மூத்த வழக்குரைஞா்கள் அல்லிராஜா, ஆழ்வாா்சாமி, ராம்குமாா், முத்துவேலன், காா்த்திக் சுரேஷ், பாக்கியராஜ் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.