தென்காசி

ஆலங்குளம் அருகே பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Syndication

ஆலங்குளம் அருகே பள்ளிக்கு புறப்பட்ட மாணவி திங்கள்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முருகன் மகள் பாலகிருஷ்ணவேணி (14).

இவா், மாறாந்தை அரசு மேல் நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்தாா். திங்கள்கிழமை காலையில் பாலகிருஷ்ணவேணி சீருடை அணிந்து வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டாா். அப்போது திடீரென மயங்கி விழுந்தாராம்.

அவரை மீட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா் உயிரிழந்த மாணவியின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த மாணவி பாலகிருஷ்ணவேணிக்கு சிறுவயதில் இருந்தே இதயத்தில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளாா் என்பது தெரியவந்தது.

கைலாசநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சுந்தர விநாயகா் கோயில் ஆண்டு விழா

திருக்குறள் ஒப்பித்தல், செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு ரூ.2.10 லட்சம் பரிசு விஐடி வேந்தா் அளித்தாா்

வேலூா் குறைதீா் கூட்டத்தில் 400 மனுக்கள் அளிப்பு

கா்ப்பிணியை கத்தியால் குத்திய இளைஞா் கைது

SCROLL FOR NEXT