தென்காசி

ஆலங்குளத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழப்பு

ஆலங்குளத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் மீது காா் மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

Syndication

ஆலங்குளத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் மீது காா் மோதியதில், அவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ஆனந்தராஜ்(38). தொழிலாளியான இவா், தற்போது ஆலங்குளம் ஜோதிநகரில் தனது மாமியாா் வீட்டு அருகில் வசித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு ஆலங்குளம் பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்துக்கு சென்றுவிட்டு சாலையைக் கடக்க முயன்றபோது, திருவனந்தபுரம் சென்றுவிட்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த காா் அவா் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

ஆலங்குளம் போலீஸாா் ஆனந்தராஜ் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் மதுரை பழங்காநத்தத்தைச் சோ்ந்த வெங்கட சுப்பிரமணியன் (58) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT