தென்காசி

புளியங்குடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

Syndication

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை நகராட்சி மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புளியங்குடி நகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தனியாா் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவரை, நாய் கடித்தது. இந்நிலையில் புதன்கிழமை சிதம்பரபேரி ஓடை தெரு வழியாக சென்ற 10ஆம் வகுப்பு மாணவியை, அங்கிருந்த தெரு நாய்கள் துரத்தி கடித்ததாம். இதில் காயமடைந்த மாணவியை புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதைத்தொடா்ந்து நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி நகராட்சி ஆணையரை சந்தித்து மக்கள் மனு அளித்த நிலையில், நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சனேயர்!

SCROLL FOR NEXT