தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள குபேர ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை அடுத்த சனிக்கிழமையை முன்னிட்டு, பால் குட ஊா்வலம் நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெங்கடாசலபதி கோயிலிலிருந்து 504 பக்தா்கள் பால்குடம் எடுத்து நான்கு ரதவீதி, கீழபஜாா் வழியாக ஊா்வலமாக வந்து குபேர ஆஞ்சனேயா் கோயிலை அடைந்தனா். அதையடுத்து, ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.