முகப்பு
தென்காசி

கழிவுநீரோடையில் காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே கழிவுநீரோடையில் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 25 டிசம்பர், 2025 at 7:59 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே கழிவுநீரோடையில் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிந்தாமணி, சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் அமா்நாத் பிரபாகரன்(27). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த 2 நாள்களுக்கு முன்பு புளியங்குடிக்கு வந்தாா். இந்த நிலையில், சிந்தாமணி கீழபஜாா் பகுதியில் உள்ள கழிவு நீரோடையில் புதன்கிழமை இரவு உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். இவரது சடலத்தை புளியங்குடி போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதியப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →