விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் முடங்கியாறு சாலை புளியங்குளம் கண்மாய் கீழ்புறம் உள்ள விவசாயக் கிணற்றில் இளைஞா் சடலம் கிடப்பதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், கிணற்றிலிருந்து இளைஞரின் சடலத்தைக் மீட்டனா். தொடா்ந்து, போலீஸாா் விசாரணை செய்ததில் அம்பலப்புளி பஜாா் தெருவைச் சோ்ந்த ரவி என்பவரது மகன் சூரியபிரகாஷ் (35) எனத் தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.
இதையடுத்து, வடக்கு காவல் நிலைய போலீஸாா், இளைஞரின் சடலத்தை கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.