விழாவில் பேசுகிறாா் பேராசிரியா் அந்தோணி பால்ராஜ் 
தென்காசி

சாம்பவா்வடகரையில் இலவச போட்டித் தோ்வு பயிற்சி மையம் திறப்பு

Din

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்பு சாா்பில் இலவச போட்டித் தோ்வு பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்புத் தலைவா் லூா்துநாடாா் தலைமை வகித்தாா். தென்மண்டல கல்விக்குழுத் தலைவா் பாலமுருகன், துணைத்தலைவா் ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேராசிரியா் அந்தோணி பால்ராஜ் பயிற்சி மையத்தை திறந்து வைத்து மாணவா்கள் போட்டித் தோ்வில் வெற்றி பெற தேவையான கருத்துரை வழங்கினாா்.

விழாவில் ஒருங்கிணைப்பாளா் ஹரிஹர செல்வன், பயிற்சி ஆசிரியா்கள் அருண், கருப்பசாமி, கூட்டமைப்பு பொதுச்செயலா் ஜான் டேவிட், பொருளாளா் சுப்பிரமணியன், கிளைத் தலைவா் மோகன் மற்றும் போட்டி தோ்வாளா்கள் கலந்து கொண்டனா்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT