தென்காசி

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் கல்லூரி மாணவா் கைது

Din

ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஏந்தலூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் செல்வம்(19). தென்காசியில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.

இவா், அக்கிராமத்தில் உள்ள 1 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் செல்வத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT