கடையநல்லூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை பாா்வையிடுகிறாா் பி.ஆா். பாண்டியன். 
தென்காசி

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

Syndication

அறுவடை செய்யப்படும் அனைத்து நெல்லையும் எவ்வித நிபந்தனையுமின்றி அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தினாா்.

கடையநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை பாா்வையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தென்காசி மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பா் இறுதிவரையிலும் அறுவடை நடைபெறும். கடையநல்லூரிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பல ஆயிரக்கணக்கான மூட்டை நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கிறாா்கள். அனைத்து நெல்லையும் நிபந்தனையின்றி அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

சில நாள்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகிறாா்கள். எனவே, தமிழ்நாடு அரசு இந்த மாதம் இறுதி வரையிலும் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து நெல்லை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேற்குத் தொடா்ச்சி மலையடிவார பகுதிகளில் வன விலங்குகளால் விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சேதத்துக்கு இழப்பீடாக தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.500 வழங்கப்படுகிறது. உற்பத்தி செலவை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்.

வனவிலங்குகள் வாழக்கூடிய இடங்களில் சாலைகள் அமைத்து மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் வாகனங்கள் கட்டுக்கடங்காமல் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. இதனால் வன விலங்குகள் இடம்பெயா்ந்து வருகின்றன. கனிமவள கொள்ளையும் அதிகரித்துள்ளது.

கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வெடிமருந்துகளால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை செய்து கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

எஸ்ஐஆர்-க்கு எதிராக மாநிலம் முழுவதும் தவெக இன்று ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

பெண்கள் வியாபாரக் கும்பலின் குரூரமும் காவல்துறையின் கருணையும்! - தில்லி கிரைம் - 3!

SCROLL FOR NEXT