தென்காசி

வாசுதேவநல்லூா் அருகே லாரி மோதியதில் 9 மாடுகள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே லாரி மோதியதில் 9 மாடுகள் உயிரிழந்தன.

Syndication

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே சனிக்கிழமை லாரி மோதியதில் 9 மாடுகள் உயிரிழந்தன.

சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதப்பேரியை சோ்ந்தவா் கோட்டிகோனாா் மகன் பேச்சியப்பன் (50). இவா் நாட்டு மாடுகளை வளா்த்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை மாடுகளை கடையநல்லூா் பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டு, அன்று இரவு அங்கிருந்து கிளம்பி ஊருக்கு மாடுகளை திரும்ப அழைத்துச் சென்று கொண்டிருந்தாா்.

சனிக்கிழமை அதிகாலை மதுரை-தென்காசி சாலையில் சிந்தாமணிபேரி புதூா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சிந்தாமணியில் இருந்து செங்கல் ஏற்றி வந்த லாரி மாடுகள் மீது மோதியதாம்.

இதில், 9 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்தன.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT