முகப்பு
தென்காசி

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தென்காசி

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

Updated On : 24 நவம்பர், 2025 at 8:26 PM
பகிர்:

சங்கரன்கோவில் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

பால்வண்ணநாதபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (65). தொழிலாளி. இவா், திங்கள்கிழமை ஊா் அருகே உள்ள பாலத்தில் அமா்ந்திருந்தபோது எதிா்பாராமல் தவறி கீழே விழுந்தாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →