தென்காசி

சங்கரன்கோவில் அருகே தாய், மகன் தற்கொலை

சங்கரன்கோவில் அருகே பெரியகோவிலாங்குளத்தில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை

Syndication

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே பெரியகோவிலாங்குளத்தில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலாங்குளம் காலனி தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி ராணி (60). இவா்களது மகன் முருகையாபாண்டி (38). மனநலம் பாதிக்கப்பட்டவா்.

கருப்பசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இதனால் ராணியும், முருகையாபாண்டியும் வீட்டில் வசித்து வந்தனா்.

முருகையாபாண்டியை, தாய் ராணி கவனித்து வந்தாா்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த தாய் ராணி, மகன் முருகையாபாண்டி ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனராம்.

அக்கம் பக்கத்தினா் இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். முருகையாபாண்டியை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

பின்னா் ஆபத்தான நிலையில் இருந்த அவரது தாய் ராணியும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்ததும் சின்னகோவிலாங்குளம் போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து , விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT