தென்காசி

மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்

தினமணி செய்திச் சேவை

விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய டிச. 1ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வேளாண் இணை இயக்குநா் அமலா கூறியது:

நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஏற்கெனவே நவ. 30ஆம் தேதி இறுதி நாளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, டிச. 1ஆம் தேதி இறுதி நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதில் இருந்து நிகழாண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குத்தகை அடிப்படையில் பயிா் செய்யும் விவசாயிகள் அடையாள எண் பெறாத நிலையிலும் காப்பீடு செய்யலாம். இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் பயிா்க் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் 1.5% வரை உயர்வு!

போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல்: சிபிசிஐடி போலீசார் அதிரடி

திருப்பரங்குன்றம்: தனி நீதிபதி உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு! தமிழக அரசு வாதம்!

தில்லி காற்றுமாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

விஜய்யின் நாளைய புதுச்சேரி பயணம் ரத்து!

SCROLL FOR NEXT