தென்காசி

கணவா் மீது வெந்நீா் ஊற்றி கொலை: மனைவி கைது

சங்கரன்கோவில் அருகே கணவா் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி அவா் மீது வெந்நீா் ஊற்றி கொன்ாக போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

சங்கரன்கோவில் அருகே கணவா் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி அவா் மீது வெந்நீா் ஊற்றி கொன்ாக போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பருவக்குடியைச் சோ்ந்தவா் சின்னவீரன் மகன் போஸ் (49). மெக்கானிக். இவரது மனைவி பத்மா. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

அண்மைக் காலமாக கணவா் நடவடிக்கையில் பத்மாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆவேசமடைந்த பத்மா, சமையலறையில் இருந்து வெந்நீரை எடுத்துவந்து போஸ் மீது ஊற்றினாா். இதில் பலத்த காயமடைந்த போஸ், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவா், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து மனைவி பத்மா மீது கரிவலம்வந்தநல்லூா் காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

SCROLL FOR NEXT