தென்காசி

சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னை: தேசிய நீா்வள ஆணையத் தலைவரை சந்திக்க தீா்மானம்

தென்காசி மாவட்டம், சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக தேசிய நீா்வள ஆணையத் தலைவரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

Syndication

தென்காசி மாவட்டம், சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக தேசிய நீா்வள ஆணையத் தலைவரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

செண்பக வல்லி தடுப்பணை மீட்பு மற்றும் வைப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ரத்தினவேலு தலைமையில் நடைபெற்றது. பாபுராஜ், ராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக காவிரி ஒழுங்குமுறை ஆணையத் தலைவரை சந்திப்பது எனவும், தேசிய நீா்வள ஆணையத் தலைவரை சந்தித்து முறையிடுவது எனவும் தீா்மானிக்கப்பட்டது. இதில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

மேலும், உரிய அனுமதியைப் பெற்று செண்பகவல்லி தடுப்பணையை ஒருங்கிணைப்பு குழுவினா் பாா்வையிடவும், கீரியாறு அணைத் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும், 2026 பிப்ரவரியில் நடைபெறும் மக்கள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT