விண்மீன் காப்பாக சிறப்பு குழந்தைகளை துணிக் கடைக்கு அழைத்துச் சென்று புத்தாடை வழங்கினாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. 
தென்காசி

சிறப்பு குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய எம்எல்ஏ

தீபாவளியையொட்டி, சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா சிறப்பு பள்ளி குழந்தைகளை துணிக் கடைக்கு அழைத்துச் சென்று புத்தாடைகள் வழங்கினாா்.

Syndication

தீபாவளியையொட்டி, சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா சிறப்பு பள்ளி குழந்தைகளை துணிக் கடைக்கு அழைத்துச் சென்று புத்தாடைகள் வழங்கினாா்.

தீபாவளி பண்டிகையின்போது கடந்த 5 ஆண்டுகளாக தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள சிறப்பு பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி வருகிறாா். அதன்படி, நிகழாண்டு பிளசிங் சிறப்பு பள்ளி , சோ்ந்தமரம் அரசு சிறப்பு குழந்தைகள் பள்ளி, சங்கரன்கோவில் அரசு சிறப்பு குழந்தைகள் பள்ளி, டிடிடிஏ பரிபவுல் சிறப்பு குழந்தைகள் பள்ளி, சங்கரன்கோவில் விண்மீன் காப்பக சிறப்புக் குழந்தைகள் உள்ளிட்ட 300 சிறப்பு குழந்தைகளுக்கு அவா் புத்தாடைகளை வழங்கினாா்.

இதில், விண்மீன் காப்பக சிறப்புக் குழந்தைகளை ஜவுளிக்கடைக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்துச் சென்று அவா்கள் விரும்பிய புத்தாடைகளை வழங்கினாா். இதனால் அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகரச் செயலா் மு.பிரகாஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் அப்பாஸ், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் காா்த்தி, மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் வீரமணி, நகர இளைஞரணி ஜான்சன்,ஜெயக்குமாா், பாலாஜி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கரூர் பலி: அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம்! பேரவையில் இபிஎஸ்

இன்றும் உயர்ந்தது தங்கம் விலை!

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?

கரூர் பலி: விஜய் தாமதமே காரணம் - பேரவையில் முதல்வர் பேச்சு!

தில்லியில் 4 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி!

SCROLL FOR NEXT