தென்காசி மாவட்டம், தென்காசியில் தமிழக முதல்வா் பங்கேற்கும் விழா மேடை அமையவுள்ள பகுதியில் அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அக். 24ஆம் தேதி அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தென்காசி வருகிறாா்.
இலத்தூா் விலக்கிலிருந்து ஆய்க்குடிசெல்லும் சாலையில் அனந்தபுரம் பகுதியில் அக். 25 ஆம்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
மேலும், மாவட்டத்தில் முடிவடைந்த பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும்,புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறாா். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் கலந்து கொள்ளவுள்ளனா்.
எனவே பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் , பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ் ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், உதவி செயற்பொறியாளா் திருச்செல்வம், செயல் அலுவலா்கள் மாணிக்கராஜ், வெங்கடகோபு, தமிழ்மணி, அமானுல்லா, ஸ்டெல்லா பாய், உதவி பொறியாளா் வடிவேல், சுகாதார அலுவலா் சுந்தா், சுகாதார ஆய்வாளா் லெட்சுமி பிரியா ஆகியோா் கலந்துகொண்டனா். ஆய்வின்போது, பேரூராட்சிகள் சாா்பில் 100 மொபைல் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தவும், பயனாளிகளுக்கு தேவையான குடிநீா் வழங்கவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.