தென்காசி

திருவேங்கடம் சாலையில் மதுக்கடை அமைக்க இந்து முன்னணியினா் எதிா்ப்பு

கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த இந்து முன்னணியினா்.

Syndication

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் அமையவுள்ள சில்லறை மதுபான விற்பனை நிலையத்திற்கு இந்து முன்னணி அமைப்பினா் ஆட்சேபம் தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

இது தொடா்பாக, சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலா் திருமலைக்குமாா் தலைமையில் அவ்வமைப்பைச் சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை கோட்டாட்சியா் அனிதாவிடம் அளித்துள்ள மனு:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை சந்திப்பு அருகே சில்லறை மதுபான விற்பனை நிலையம் அமைய இருப்பதாக தெரிய வருகிறது. இந்த இடம் சங்கரன்கோவில் நகரின் மிக முக்கியமான பகுதியாகும். அதிக அளவிலான குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைகளின் அருகில் மது விற்பனை நிலையம் அமைக்கக் கூடாது என்ற விதி உள்ளது. எனவே இங்கு மதுபான விற்பனை நிலையம் அமைந்தால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

எனவே, இதற்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

நெல்லையில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பெண் பலி

மகளிர் உலகக் கோப்பை: வாழ்வா, சாவா போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்!

அன்றில் பறவைகள்... காஜல் - நிஷா அகர்வால்!

SCROLL FOR NEXT