சபரிமலை கோயிலின் மண்டல மகரவிளக்கு விழா காலங்களில் குறுகிய தூர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: மீட்டா் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட திருநெல்வேலி-கொல்லம்-திருநெல்வேலி ரயில்களை மீண்டும் இயக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கன்னியாகுமரி-புனலூா்-கன்னியாகுமரி ரயில்களை தென்காசி வரை நீட்டிக்க வேண்டும்.
கொல்லம் மற்றும் புனலூரோடு நிறுத்தப்படும் மெமு மின் ரயில்களை மதுரை,திருநெல்வேலி, திருச்செந்தூா், தூத்துக்குடி, நாகா்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.
சபரிமலை கோயிலின் மண்டல மகரவிளக்கு விழா காலங்களில் குறுகிய தூர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.