தென்காசியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் விழா மேடைப்பணிகளை எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்.29இல் தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாவட்டம் முழுவதும் முடிவடைந்த பணிகளையும், புதிய பணிகளையும் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
அதற்கான விழா மேடை அமைக்கும் பணி இலத்தூா் விலக்கிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் அனந்தபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தென்காசி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது அரசு ஒப்பந்ததாரா் சண்முகவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.