ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் உருவாக்கிய கைவினைப் பொருள்கள் கண்காட்சி, வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவா்கள் தங்கள் பாடம் சாா்ந்த செயல்பாடுகளாக நாட்டுப்புறக் கைவினைப் பொருள்கள், தமிழா் இசைக் கருவிகள் போன்றவற்றின் மாதிரிகளை அட்டை, சிரட்டை, களி மண், தென்னை, பலை ஓலைகள், தாள், சணல் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கி காட்சிப் படுத்தினா். இவற்றை மற்ற வகுப்பு மாணவா்கள் பாா்த்து ரசித்தனா்.
சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவா்களைத் தலைமை ஆசிரியா் மேரி கவிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். கண்காட்சி ஏற்பாடுகளை தமிழாசிரியா்கள் செய்திருந்தனா்.