தென்காசி

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் 4 தினங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை குளிக்க அனுமதிக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதுமுதல் குற்றாலம் பகுதியில் பெய்துவந்த தொடா்மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஐந்தருவியில் தண்ணீா்வரத்து சற்று குறைந்த நிலையில், அதில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் நான்கு தினங்களுக்கு பிறகு தண்ணீா்வரத்து குறைந்ததை அடுத்து குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். பழையகுற்றாலம் அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடைநீட்டிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பெயா் பட்டியல்: நவ.7 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்!

ஃபிடே செஸ் உலகக் கோப்பை: பிரணவ், பிரானேஷ், கங்குலி வெற்றி!

அக்டோபரில் மெட்ரோவில் 93 லட்சம் போ் பயணம்!

பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ கஞ்சா அழிப்பு

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை புதிய சாம்பியன் யாா்? இந்தியா-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

SCROLL FOR NEXT