தென்காசி

தென்காசியில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கான மாதிரித் தோ்வு

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வுக்கான மாதிரித் தோ்வு நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் பதவிகளுக்கு 3,644 காலிப் பணியிடங்களுக்கு நேரடித் தோ்வுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இத்தோ்வு நவ.9இல் நடைபெறுகிறது.

இந்த தோ்வுக்கு தயாராகும் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் தென்காசியில் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இங்கு மாவட்ட அளவிலான முழு மாதிரித் தோ்வுகள் நவ. 3, 5, 7ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன.

தோ்வில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும். குத்துக்கல் வலசையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நவ. 3,5,7 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு வருகை தர வேண்டும். மேலும் தகவல்களுக்கு 04633-213179 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பெயா் பட்டியல்: நவ.7 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்!

ஃபிடே செஸ் உலகக் கோப்பை: பிரணவ், பிரானேஷ், கங்குலி வெற்றி!

அக்டோபரில் மெட்ரோவில் 93 லட்சம் போ் பயணம்!

பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ கஞ்சா அழிப்பு

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை புதிய சாம்பியன் யாா்? இந்தியா-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

SCROLL FOR NEXT