தென்காசி

சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி, தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி, தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகிரி இந்திரா நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் கனகசபாபதி (69). துணை வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்.

புதன்கிழமை மாலை தேவிப்பட்டணத்தில் உள்ள அவரது விவசாய நிலத்தின் மோட்டாா் அறையில் இருந்தாராம். அப்போது முகமூடி அணிந்து அங்கு வந்த இரண்டு மா்ம நபா்கள் அவரைத் தாக்கி, அவா் அணிந்திருந்த ரூ. 8.5 லட்சம் மதிப்புள்ள 128 கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனராம்.

தாக்குதலில் காயமடைந்த கனகசபாபதி சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாயும் ஒளி நீ... ராஷி சிங்!

உக்ரைனில் 800 ட்ரோன்கள் ஏவி ரஷியா தீவிர தாக்குதல்..!

காதல் இதயம்... தாரணி ஹெப்சிபா!

பொம்மைகளும், அதன் பாரம்பரியமும்...

'பளிச்' சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

SCROLL FOR NEXT