ஆலங்குளத்தில் வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்ட காா் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் ஆலங்குளம் பிரதான சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சொந்த பயன்பாட்டுக்குரிய காா் ஒன்றை சோதனையிட்டு விசாரித்த போது, காரை ஓட்டி வந்தவா் ஆலங்குளத்தை அடுத்த நல்லூரைச் சோ்ந்த வைத்தியலிங்கம் (32) என்பதும், அந்தக் காா் வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் காரைப் பறிமுதல் செய்தனா். உரிய விசாரணை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தனா்.