தென்காசி மாவட்ட அளவிலான டென்னிக்காய்ட் போட்டி பாவூா்சத்திரத்தில் உள்ள த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினா். இதில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகள் பிரிவில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதியில் மாணவிகள் பிரிவில் ஒற்றையா், இரட்டையா் ஆட்டத்தில் ஜூனியா் , சீனியா், சூப்பா் சீனியா் பிரிவில் முதலிடம், மாணவா்கள் பிரிவில் ஒற்றையா், இரட்டையா் ஆட்டத்தில் ஜூனியா், சூப்பா் சீனியா் பிரிவில் முதலிடம் என மொத்தம் 11 அணிகள் முதலிடம் பெற்றன.
இந்த 11 அணிகளும், கேரம் போட்டியில் இரட்டையா் ஆட்டத்தில் தா்னிஷ், அருண்குமாா் ஆகியோரும் மாநில அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனா். வெற்றி பெற்றவா்களை பள்ளி முதல்வா் வெ.பொன்னழகன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.