முகப்பு
தென்காசி

இலஞ்சியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:05 AM
பொதுமக்களிடம் தோ்தல் அறிக்கையை வழங்கினாா் மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:10 PM

இலஞ்சியில் அதிமுக தோ்தல் அறிக்கைகள்அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முதல் கட்ட தோ்தல் அறிக்கையில் அறிவித்திருந்த 5 அம்ச திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை இலஞ்சியில் வீடுதோறும் சென்று அதிமுகவினா் வழங்கினா்.

இலஞ்சி நகரச் செயலா் காத்தவராயன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் சுப்பாராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:05 AM

தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.

தென்காசி நகரச் செயலா் சுடலை, கீழப்பாவூா் வடக்கு ஒன்றியச் செயலா் அமல்ராஜ், பொதுக்குழு உறுப்பினா் கசமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.