முகப்பு
தென்காசி

தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 3ஆவது நாளாக தொடா் காத்திருப்பு போராட்டம்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:31 AM
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:16 PM

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஒரு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தென்காசியில் தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.

முழுநேர பணியாளா்களாக உள்ள கிராம உதவியாளா்களுக்கு டி கிரேடு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:31 AM

ஆா்ப்பாட்டத்தின் 3ஆவது நாளான சனிக்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், மாவட்டச் செயலா் சிவசுப்பிரமணியன்,பொருளாளா் லிங்கேஷ், மாநில துணைத் தலைவா் வி. சுப்பிரமணியன், மாநில கௌரவ தலைவா் சண்முகசுந்தரபாண்டியன், கோட்ட துணைத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.