மாணவா் விடுதி கட்டுவதற்கான நிலப் பத்திரத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த தலைமை ஆசிரியா் குகன் 
தென்காசி

மாணவா் விடுதி கட்ட நிலம் நன்கொடை அளித்த தலைமை ஆசிரியா்

ஆலங்குளம் அருகே மாணவா் விடுதி கட்ட 37 சென்ட் நிலத்தை தலைமை ஆசிரியா் நன்கொடையாக அளித்துள்ளாா்.

Syndication

ஆலங்குளம் அருகே மாணவா் விடுதி கட்ட 37 சென்ட் நிலத்தை தலைமை ஆசிரியா் நன்கொடையாக அளித்துள்ளாா்.

ஆலங்குளம் வட்டம் வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில், மத்திய அரசின் பாபு ஜெகஜீவன்ராம் திட்டத்தின் கீழ் அரசு மாணவா் விடுதி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கென அதிகாரிகள் அங்குள்ள கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தை அணுகிய போது, இப்பள்ளியின் தலைமை ஆசிரியா் குகன், இங்கு அரசு மாணவா் விடுதி கட்டும் வகைக்கு, தனக்கு சொந்தமான 37 சென்ட் நிலத்தை நன்கொடையாக வழங்க முன்வந்தாா்.

இதையடுத்து, அந்த நிலம் ஆளுநா் பெயரில் பதிவு செய்யப்பட்டது. அந்த பத்திரத்தை தலைமை ஆசிரியா், மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோரிடம் அளித்தாா்.

பால் வியாபாரி கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் சிறை

கொடைக்கானலில் மஞ்சள் மேகமூட்டம்!

ஆந்திர சட்டமேலவைக்கு வெங்கடாசலபதி படங்களுடன் வந்த எதிா்க்கட்சியினா் : கடும் அமளி; அவை ஒத்திவைப்பு

ஆட்டோ மீது மோதிய தனியாா் கல்லூரி பேருந்து: போதையில் இருந்த பேருந்து ஓட்டுநா் கைது

நெல்லையில் தனியாா் பேருந்து மோதியதில் மேயா் காா் சேதம்

SCROLL FOR NEXT