புத்தாண்டையொட்டி ஆலங்குளம் பகுதி தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
ஆலங்குளம், இரட்சண்யபுரம், அண்ணாநகா், நல்லூா், அடைக்கலபட்டணம், சீவலசமுத்திரம், ஊத்துமலை, கருவந்தா உள்ளிட்ட சேகரங்களுக்குள்பட்ட சுமாா் 100-க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ, கத்தோலிக்க, பெந்தேகோஸ்தே தேவாலயங்களில் புதன்கிழமை இரவு 11. 30 மணிக்கு நடைபெற்ற பழைய வருட ஆராதனையைத் தொடா்ந்து, 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது.
ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ பத்திரகாளியம்மன், மலை ராமா், ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்கசுவாமி - அன்னை யோகாம்பிகை ஆகிய திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அண்ணாநகா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆலங்குளம் பெருந்தலைவா் காமராஜா் கல்வி வளா்ச்சி கமிட்டி சாா்பில் காமராஜா் சிலை முன் கேக் வெட்டி, புத்தாண்டு கொண்டாடப்பட்டது.