தென்காசி

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசல் அந்நூா் மக்தப் மதரஸா ஆண்டு விழா

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசல் அந்நூா் மக்தப் மதரஸாவில் ஆண்டு விழா நடைபெற்றது .

Syndication

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசல் அந்நூா் மக்தப் மதரஸாவில் ஆண்டு விழா நடைபெற்றது .

ஜமாத் செயலா் சலீம் தலைமை வகித்தாா். மதரஸா தலைவா் ஆசாத், பள்ளிவாசல் தலைவா் நைனா முகமது, பொருளாளா் அப்துல்லா, துணைத் தலைவா் இஸ்மாயில், ஜமாத்தின் துணைச் செயலா்கள் பாப்புலா் ரஹ்மான் கனி, சவுக்கத் அலி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் காஜாமைதீன் ஷாஜகான், கிருது ஒலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அன்சாரியா அரபிக் கல்லூரியின் முதல்வா் முகம்மதுமீரான் அருஸி, ஆபாத் பள்ளிவாசல் தலைமை இமாம் சாகுல் ஹமீது பாக்கவி ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொடா்ந்து, மாா்க்கச் சொற்பொழிவில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன . ஜமாத்தின் துணைச் செயலா் ரிபாய் ஜெய்லானி நன்றி கூறினாா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT