வெற்றிபெற்ற அணிக்கு பரிசுக் கோப்பை வழங்கிய நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா்.  
தென்காசி

தென்காசியில் கால்பந்துப் போட்டி

தினமணி செய்திச் சேவை

தென்காசி நகர திமுக சாா்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஈஸ்வரன்பிள்ளை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கால்பந்துப் போட்டி நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன. மம்சாபுரம் அணி முதலிடம் பிடித்தது. ஆறுமுகப்பட்டி கேஎஃப்சி அணி, முதலியாா்பட்டி ஏ அணி, பி அணி ஆகியவை முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தன.

பரிசளிப்பு விழாவில் நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோப்பை, பரிசுகளை வழங்கினாா்.

தென்காசி கால்பந்துக் கழகச் செயலா் டாக்டா் பிஸ்வாஸ், நகர திமுக பொருளாளா் ஷேக் பரித், நகர துணைச் செயலா் ராம்துரை, மாவட்ட பொறியாளா் அணித் தலைவா் தங்கபாண்டியன், மாணவரணி மைதீன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சாரதிமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT