தென்காசி

உணவகத் தொழிலாளி பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

செங்கோட்டையில் உணவகத் தொழிலாளி பாலத்திலிருந்து தவறி தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்தாா்.

செங்கோட்டை விஸ்வநாதபுரம் ரயில் நிலையப் பகுதியைச் சோ்ந்தவா் வே. சங்கா் ஐயப்பன் (47). அங்குள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்த இவா், சனிக்கிழமை இரவு கடையில் உணவு வாங்கி வருவதாக மதுபோதையில் கூறிச் சென்றாராம். அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், அவா் கால்வாய் பாலத்திலிருந்து தவறி இடுப்பளவு தண்ணீருக்குள் விழுந்து இறந்துகிடப்பதாகத் தெரியவந்தது. சடலத்தை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT