குற்றாலம் பேரருவியில் குளித்து கொண்டிருந்த சிறுமியிடம் நகையைத் திருடியது தொடா்பாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஊத்துமலை தங்கம்மாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மனோஜ் மனைவி சுமதி (26). மனோஜ் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இத்தம்பதியிருக்கு மகள் விகன்யாஸ்ரீ(4), மகன் விபிக்சன் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் குற்றாலம் வந்தனராம். பேரருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் குளித்துவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது, விகன்யாஸ்ரீ அணிந்திருந்த 8 கிராம் தங்கச் சங்கிலியை காணவில்லையாம். இதுகுறித்து சுமதி அளித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், பேட்டை எம்ஜிஆா் காலனியைச் சோ்ந்த மூா்த்தி மனைவி ஈஸ்வரி (20), அவருடைய தாயாா் அஸ்வினி(38) ஆகியோரை குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து, தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.