தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
செங்கோட்டை சுடலையாண்டி செட்டியாா் காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. ரமேஷ் (36). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
ரமேஷ் கேரளத்தில் லாட்டரிச்சீட்டுக் கடையில் வேலை செய்து வந்தாா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். சனிக்கிழமை தகராறு ஏற்பட்டதையடுத்து, அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், ரமேஷ் திருச்செந்தூா் கோயிலுக்கு அணிந்திருந்த மாலையைக் கழற்றிவிட்டு, அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். சடலத்தை செங்கோட்டை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.