கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினா் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ஈ. ராஜா எம்.எல்.ஏ. 
தென்காசி

சங்கரன்கோவிலில் 577 கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரிகளில் பயிலும் 577 கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு, சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Syndication

தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரிகளில் பயிலும் 577 கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு, சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கிப் பேசினாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வியாசா மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் 214 பேருக்கும், வளனாா் ஐடிஐ மாணவா்கள் 73 பேருக்கும், ஆா்.வி. ரேகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 48 பேருக்கும், பேரறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் 104 பேருக்கும், பி.ஜி.பி. ஐடிஐ மாணவா்கள் 42 பேருக்கும், எஸ். வீராச்சாமி செட்டியாா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 59 பேருக்கும், கே. ராமச்சந்திரா நாயுடு ஸ்கூல் ஆப் நா்ஸிங் மாணவா்கள் 37 பேருக்கும் என மொத்தம் 577 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இதில் சங்கரன்கோவில் அரசு கல்லூரி முதல்வா் ( பொ )வேணுகோபால், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT