முகப்பு
தென்காசி

தென்காசியில் 7,127 பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Updated On : 6 மார்ச், 2026 at 4:08 AM
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 7:46 PM

தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 7,127 பயனாளிகளுக்கு ரூ. 44.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) வழங்குகிறாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டம், இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, ஒருங்கிணைந்த வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சமூக நலத் துறை, மாவட்ட தொழில் மையம்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கூட்டுறவுத் துறை, முன்னோடி வங்கி ஆகிய துறைகளில், 7, 127 பயனாளிகளுக்கு ரூ. 44.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

Advertisement

மேலும், ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் 32 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 55.93 கோடி மதிப்பீட்டில் 185 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.