முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.94 லட்சம்

Updated On : 24 ஏப்ரல், 2024 at 6:48 PM
பகிர்:

திருத்தணி, ஏப். 24: முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.94 லட்சத்து 45 ஆயிரத்து 487 மற்றும் 416 கிராம் தங்கம், 7,045 கிராம் வெள்ளியை காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

அறுபடை வீடுகளில் 5 -ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனா்.

இதனிடையே சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 11 நாள்கள் நடைபெற்றது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா்.

Advertisement

பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி புதன்கிழமை காலை தேவா் மண்டபத்தில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் வான்மதி தலைமையில் நடைபெற்றது. முருகன் கோயில் தக்காா் ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மு.நாகன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில் கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் உண்டியல் காணிக்கை எண்ணினா்.

இதில் கடந்த 27 நாள்களில் 94 லட்சத்து 45 ஆயிரத்து 487 ரூபாய் ரொக்கம், 416 கிராம் தங்கம், 7,045 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருப்பதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments