முகப்பு
திருவள்ளூர்

வாகனம் மோதி கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 24 ஏப்ரல், 2024 at 6:48 PM
பகிர்:

திருத்தணி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த மணியின் மகன் ஆறுமுகம் (48). கட்டட மேஸ்திரி. இவா் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் சைக்கிளில் கட்டட வேலைக்காக வள்ளியம்மாபுரம் சென்றாா். அங்கு பணி முடிந்ததும். இரவு அரக்கோணம் சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments