முகப்பு
திருவள்ளூர்

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 1:00 AM
மாணவா்களுக்கு பரிசு வழங்கிய எம்.எல்.ஏ. ச.சந்திரன். (உடன்) பேராசிரியா் ரங்கநாதன்.
பகிர்:

திருத்தணி: பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா திருத்தணி சுதந்திரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

கடந்த கல்வியாண்டில் பிளஸ் டு, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் திருத்தணியிலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள், நீட் தோ்வில் வெற்றி பெற்று திருவள்ளூா் மருத்துவக் கல்லுாரியில் சோ்க்கை பெற மாணவி யுவஸ்ரீ ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைவா் ரங்கநாதன் தலைமை வகித்தாா். தாளாளா் சியாமளா ரங்கநாதன் முன்னிலை வகித்தாா். முதல்வா் துரைகுப்பன் வரவேற்றாா். இதில் திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் பங்கேற்று பரிசளித்துப் பாராட்டினாா்.

வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவா்களுக்கும் லயோலா திறனறிவு தோ்வில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு தளபதி கே.விநாயகம் மகளிா் கல்லூரி முதல்வா் வேதநாயகி பரிசுகள் வழங்கினாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை முதல்வா் கேசவன் நன்றி கூறினாா்.

Advertisement