மின்சார ரயில் மோதி மயில் உயிரிழப்பு
மின்சார ரயில் மோதி பெண் மயில் பலி
பொன்னேரி: மீஞ்சூா் ரயில் நிலையத்தில் மின் ரயில் மோதியதில் பெண் மயில் செவ்வாய்கிழமை உயிரிழந்தது.
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூரில் ரயில் நிலையத்தில் உள்ள 3-வது நடை மேடையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மின்சார ரயில் வந்தது.
அப்போது திடீரென பறந்து வந்த பெண் மயில் ஒன்று ரயிலில் முன்புறம் அடிபட்டு அங்குள்ள நடைமேடையில் கீழே விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மீஞ்சூா் வருவாய்த்துறை ஆய்வாளா் புருஷோத்தமன் பெண் மயிலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தாா்.