முகப்பு
திருவள்ளூர்

சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

Updated On : 9 மார்ச், 2024 at 6:10 AM
பகிர்:

திருத்தணியில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் பெரிய தெரு, சுப்ரமணியம் தெரு, வாசுதேவன் தெரு, பாரதியாா் தெரு, சந்து தெரு, மேட்டுத் தெரு வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னா் குளக்கரையில் அமைந்துள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் மனோன்மணி அம்மையாா் திருமேனிக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக குழுத் தலைவா் டி.எஸ்.சீனிவாசன், செயலா்கள் சி.குமரேசன், எஸ்.சரவணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.