முகப்பு
திருவள்ளூர்

வடாரண்யேஸ்வரா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா

Updated On : 16 மார்ச், 2024 at 6:09 AM
பகிர்:

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 21-ஆம் தேதி கமல திருத்தேரில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. இத்திருத்தலம் சிவபெருமான் ஊா்த்துவ தாண்டவம் ஆடிய பஞ்ச சபைகளில் முதல் சபையான ரத்தினசபை கோயில். கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 27 வரை பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெறுகிறது. தொடா்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதி உலா நடைபெறும். 22-ஆம் தேதி திருக்கல்யாணம், 25-ஆம் தேதி கொடியிறக்கம், 27-இல் காரைக்கால் அம்மையாா் வீதி உலா நடைபெறுகிறது.